“6 ஏர்பேக் ரூல் கட்டாயப்படுத்த இயலாது”
மனதில் பட்ட கருத்துகளை எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக பேசுவதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உலகளவில் பிரபலமானவர்.இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது 6 ஏர்பேக்களை கார்கள் தயாரிக்கும்போது கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். இதே நிதின்கட்கரிதான் கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த நிகழ்ச்சியில் கார்களில் பாதுகாப்பை உறுதி செய்ய 6 ஏர்பேக் வசதி கார்களில் கட்டாயம் என்று கூறியிருந்தார். 2019 ஆம் ஆண்டும்,ஜனவரி 2022ஆம் ஆண்டும், கார்களில் ஓட்டுநர் மற்றும் முன்இருக்கையில் அமர்ந்திருப்போர் பாதுகாப்புக்காக ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. 6 காற்றுப்பைகள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டாயமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை கட்டாயப்படுத்த இயலாது என்று அமைச்சரே மாற்றி பேசியுள்ளார். பாதுகாப்பான மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து கடந்தாண்டு பேசியிருந்த நிதின் கட்கரி,இப்போது தலைகீழாக பேசுகிறாரே என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்தாண்டு பேசிய நிதின் கட்கரி, பெரிய மற்றும் சொகுசு கார்களில் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் அத்தனை ஏர்பேக்கள் உள்ளன.ஏன் ஏழை நடுத்தர மக்கள் வாங்கும் கார்களில் இந்த பாதுகாப்பு அம்சம் இல்லை என்று கொந்தளித்து இருந்தார். அதையெல்லாம் சேர்த்தால் உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும் என்று கார் உற்பத்தி நிறுவனங்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.