பிரியும் டிவிஎஸ் குழுமம் – கிடைத்தது இறுதி ஒப்புதல்..!!
பிப்ரவரி மாதம் சென்னையின் கார்ப்பரேட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான TVS குழுமம் பிப்ரவரி 4 அன்று தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) குடும்ப சொத்தான டிவிஎஸ் குழுமத்தை பிரிப்பதற்கு இறுதி ஒப்புதலைப் பெற்றது. இது குறிப்பிடத்தக்க ஒரு ஏற்பாடாகும்.
சுமூகமாக பிரிந்த டிவிஎஸ் குழுமம்:
டி.வி.எஸ் குழுமத்தின் நான்கு கிளைகளான டி.எஸ்.ராஜம், டி.எஸ்.கிருஷ்ணா, டி.எஸ்.சீனிவாசன் மற்றும் டி.எஸ்.சந்தானம் குடும்பங்களின் குடும்ப ஏற்பாட்டிற்கான மெமோராண்டம் (எம்.எஃப்.ஏ) அடுத்த தலைமுறைக்கு சுமூகமாக வழங்குவதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மற்ற முக்கிய மாற்றங்களில் டிவிஎஸ் சுந்தரம் மோட்டார்ஸ் சென்னை அண்ணாசாலையில் 2,14,00,000 சதுர அடி சொத்துக்களை பிரிகேட் குழுமத்திற்கு சுமார் ரூ.600 கோடிக்கு விற்கும் நடவடிக்கையும் அடங்கும்.
ஏப்ரல் 1 ,2023 இன் அசல் அட்டவணைக்கு ஒரு வருடம் முன்னதாக வேணு சீனிவாசன் TVS மோட்டார் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ரால்ஃப் டைட்டர் ஸ்பெத்திடம் ஒப்படைக்கிறார். அதற்கு பதிலாக சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் (SCL) இன் தலைவராகவும் சீனிவாசன் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
1992-93 இல் தாராளமயமாக்கலின்போது 3,000 கோடி ரூபாயாக காணப்பட்ட TVS குழுமத்தின் விற்று முதல், 2004-05 இல் சுமார் 12,000 கோடி ரூபாயாக வளர்ந்து தற்போது 63,000 கோடி ரூபாயாக உள்ளது. ஒரு ஆதாரத்தின்படி, இந்த ஒவ்வொரு குழுவிற்கும், குறிப்பாக எதிர்காலத்திற்கான உத்திகளைப் பொறுத்தவரை இந்த மறுசீரமைப்பு என்பது எளிதாக முடிவெடுப்பதைக் குறிக்கிறது.