ஆரம்பமே அட்டகாசம்தான்…

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. ஏப்ரல் 24ம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மும்பை பங்குச்சந்தையில் பிரதானமான 30 பங்குகள் 410 புள்ளிகள் அதிகரித்து 60ஆயிரத்து 56 புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119 புள்ளிகள் உயர்ந்து 17,743 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.உலகளவில் நிலையற்ற சூழல் காணப்பட்டாலும் இந்திய பங்குச்சந்தைகளில் வலுவான நிலை இருந்ததால் இந்திய பங்குகள் ஏற்றம் கண்டதாக நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்எச்டிஎப்சி லைப் நிறுவன பங்குகள் 6விழுக்காடு உயர்ந்து காணப்பட்டதுTata Consumer, Wipro, Axis Bank, ICICI Bank,ஆகிய பங்குகளின் விலை 5விழுக்காடு வரை விலையேற்றம் கண்டன.Dr Reddy’s Labs, IndusInd Bank, Cipla உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன.இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்ததைப் போலவே தங்கமும் விலை லேசாக உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்த தங்கத்தின்விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து 615 ரூபாயாக விற்பனையாகிறது.வெள்ளி ஒரு கிராம் 40 காசுகள் விலை குறைந்து 80 ரூபாய் 40 காசுகளாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 44ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை 400ரூபாய் குறைந்து 80ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. தங்கம் வாங்கும்போது மேலே சொன்ன விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு தகுந்தபடி செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாக உள்ளது.