கடுமை காட்டும் கனடா அரசாங்கம்..
உயர் கல்விக்காக கனடா செல்ல விரும்புபவரா நீங்கள்,உங்களுக்கான கசப்பான செய்தி இது.
அண்மையில் கனடா அரசாங்கத்தின் irccஎனப்படும் குடிமைப்பணிகள் அதிகாரிகள், தங்கள் புதிய விதியை அறிவித்துள்ளனர்.
அதன்படி படிக்கும்போது, கனடாவில் வசிக்க தேவையான பணத்தின் அளவை தற்போது இருப்பதைவிட இரட்டிப்பாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.
2000ஆம் ஆண்டு முதல் கனடாவில் தங்கி படிக்க விரும்புவோர் வைத்திருக்க வேண்டிய தொகையாக 10ஆயிரம் டாலர்களாக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டு 20ஆயிரத்து 635 டாலராக உயரப்போகிறது.
சர்வதேச நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிக்கல்களை தடுக்கவே இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் கூறுகிறார். ஒருவாரத்தில் 20 மணி நேரம் வரை மட்டுமே மாணவர்கள்பகுதி நேர வேலை செய்யலாம் என்ற விதி அமலாக இருக்கிறது.
மாணவர்கள் 18 மாதங்கள் வேலை செய்ய அளிக்கப்படும் தற்காலிக திட்டங்கள் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளை அமல்படுத்தும் அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் செய்து வருகிறது.
இவ்வளவு பணம் இருந்தால்தான் படிக்கவே அனுமதி கிடைக்கும் என்ற சூழல் குறைந்த வருவாய் கொண்ட மாணவர்களின் கனவுகளை கேள்விக் குறியாக்கி இருக்கிறது.