கமிஷன் மட்டும் 42,000 கோடி ரூபாய்…
Insurance Regulatory and Development Authority of India என்ற அமைப்பு இந்தியாவின் காப்பீட்டு நிறுவனங்கள் குறித்த ஆண்டு தரவுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி வாழ்நாள் காப்பீட்டு நிறுவனங்கள் 42,322 கோடி ரூபாய் அளவுக்கு தரகு தொகையாகவும் கமிஷன் தொகையாகவும் அளித்துள்ளது. இந்த கமிஷன் தொகை என்பது 2022-23 நிதியாண்டில் மட்டும் 5.18% உயர்ந்திருக்கிறது. இதுவே கடந்த 2021-22 காலகட்டத்தில் 5.18%ஆக இருந்தது. பிரீமியத்துக்கான தொகைக்கு பதிலாக கமிஷன் தொகை உயர்ந்திருக்கிறதாம். 2022-23 நிதியாண்டில் மட்டும் 17.93 விழுக்காடு உயர்வை கமிஷன் தொகைகள் கண்டுள்ளன. இதே அளவு கடந்தாண்டு 12.98%ஆக இருந்தது. அரசு நிறுவனமான LICயுடன் இணைந்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கமிஷன் தொகையை அதிகரித்தன. இந்த நிலையில்,பணிகளையும் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
முதல் ஆண்டு கமிஷன் தொகை என்பது தனியார் நிறுவனங்களில் 10.94% என்ற அளவில் 2021ல் முடந்திரு்கிறது.இதுவே இரண்டாவது ஆண்டில் இதே பாணியை பின்பற்றியபோது15.78விழுக்காடு அதிகரித்து உள்ளது. தனியார் நிறுவனங்கள் கமிஷன் தொகை அதிகம் அளிப்பதாக புகார்கள் எழுந்தாலும்,இன்னமும் அரசுத்துறை நிறுவனமான எல்ஐசிக்கு நிகராகவில்லை என்கிறார்கள் முகவர்கள். தனியார் காப்பீடு என்பது முதலாம் ஆண்டு பிரீமியம் வசூலிப்பு என்பது 70 ஆயிரத்து 834 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால் அரசுத்துறை காப்பீடுகளின் வருவாய் வெறும் 36,649 கோடி ரூபாயாக அரசுத்துறை வங்கிகளில் பிரீமியமாக வரவு வைக்கப்பட்டது.
ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு அளவு கமிஷன் உயரும் என்று கூறப்படுகிறது. ஆயுள் காப்பீட்டுத்துறையில் மட்டும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுள் காப்பீட்டுத்துறை மட்டும் 452%வளர்ச்சி கண்டிருக்கிறது.
லாபம் மட்டும் 42,778 கோடி ரூபாயாக இறுக்கிறது. இது கடந்த 2021-22 காலகட்டத்தில் வெறும் 7751 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக பதிவாகியிருந்தது. காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் ஆண்டு கணக்குகளை வெளியிட்டு வரும் நிலையில் எல்ஐசியும் அண்மையில் தனது காப்பீட்டு திட்டங்களை முறைப்படுத்தியுள்ளது.