12 விழுக்காடு சரிந்த நிறுவனம்!!! ஏன் தெரியுமா.?
இந்திய அளவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக மணப்புரம் பைனான்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 12 விழுக்காடு சரிந்ததன. ஏனெனில் அந்த நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 11.3 விழுக்காடு அளவுக்கு இந்த நிறுவன பங்குகள் சரிந்ததை அடுத்து ஒரு பங்கின் விலை 115 ரூபாய் 5 பைசாவாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி பொதுமக்கள் பணம் 150 கோடி ரூபாயை இந்த நிறுவனம் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்தே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.திருச்சூரை பூர்விகமாக கொண்ட இந்த நிறுவனத்தின் 4 கிளைகளில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரலில் இந்த நிறுவனம் சுமார் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டிருந்தது. தற்போது அது 10 விழுக்காடு குறைந்தது. நவம்பர் 2021-இல் 200 ரூபாயாக இருந்த பங்குகள் கடந்தாண்டு மே-ஜூன் காலகட்டத்தில் 60 விழுக்காடு விலை சரிந்தது. கடந்த ஜூனுக்கு பிறகு அசுர வளர்ச்சி கண்டு வந்த இந்த நிறுவனம் 20 விழுக்காடு அதிக வளர்ச்சியை தங்கம் இல்லாத பிற வணிகத்தில் காட்டியுள்ளது.