எங்களை அழிக்க முயற்சி நடக்கிறது என புலம்பிய நிறுவனம்!!!
கடும் நிதிநெருக்கடி மற்றும் இன்ஜின் கோளாறு காரணமாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது சேவையை அடுத்தடுத்து நிறுத்தியது. இதனால் அந்த நிறுவனம் பெரிய பொருளாதார இழப்பையும், வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயரையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் தங்கள் பிரச்னைக்கு என்னதான் காரணம் என்று கோஃபர்ஸ்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில் தங்கள் விமானங்களுக்கு இன்ஜின் அனுப்பி வரும் பிராட் என்ற நிறுவனத்திடம் பல முறை முறையிட்டும் அவர்கள் இன்ஜின் கோளாறை சரி செய்யவில்லை என்றும்,உலகம் முழுவதும் பல்வேறு விமான நிறுவனங்கள் பிராட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அதிகபட்ச பாதிப்பு இந்தியாவில்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது. 25 விழுக்காட்டுக்கும் அதிகமான பாதிப்பு இந்தியாவில்தான் நடப்பதாகவும்,கூறப்பட்டுள்ளது. வெறும் 5 விழுக்காடு அளவுக்கு பாதிப்பு இருந்தால் பிரச்னையை சமாளிக்க முடியும் என்ற நிலையில் 54 விழுக்காடு தங்கள் நிறுவனத்தின் இன்ஜின்கள் பழுதாகி கிடப்பதாகவும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தனது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது கோஃபர்ஸ்ட் நிறுவனத்தினை அழிக்கும் அப்பட்டமான முயற்சி என்றும் கோ பர்ஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. இன்ஜின்கள் கோளாறு மற்றும் நிதி நெருக்கடியால் விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்த கோஃபர்ஸ்ட் நிறுவனம் ,டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் திவால் நோட்டீசும் அளித்தது குறிப்பிடத்தக்கது.