நடப்பு கணக்கு தலைவலி மீண்டும் தொடங்கியது…
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவது. இதற்கான காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 90 டாலர்களை கடந்து விற்பதே.ஆகஸ்ட் மாதத்தில் பொருட்கள் விர்த்தகமாகும் விகிதத்தின் இடைவெளி கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவை எட்டியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் 3ஆவது நாடாக இந்தியா உள்ளது. ஏற்றுமதியில் வீழ்ச்சியும் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்தாண்டு இறுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியாவும்,ரஷ்யாவும் திட்டமிட்டுள்ளன.செப்டம்பர் மாதம் 18ஆம்தேதி பிரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலை 93டாலராக உயர்ந்திருக்கிறது.கேர் என்ற அமைப்பும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்தியாவில் 20 அடிப்படை புள்ளிகள் உயர வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பு 83 ரூபாய் வரை வீழ்ந்திருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பற்றி அறிய நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒன்றே போதுமானது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கச்சா எண்ணெயை அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது என்பதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியா மட்டும் ரஷ்யாவிடம் குறைவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதிலும் சிக்கல் நீடித்துள்ளது. 2021-22 காலகட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது உள்நாட்டு உற்பத்தியில் 1.2%ஆக உயர்ந்துள்ளது. அடுத்தாண்டு இந்தியாவின் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும்,நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கின்றன.இதனை மையமாகக் கொண்டு பெரிய முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.