புலி வருது புலி வருது என மிரட்டும் பாணியில் தொடங்கிவிட்ட பொருளாதார மந்தநிலை..
உலகின் வல்லரசு நாடுகளில் முதன்மையாக திகழ்வது அமெரிக்கா. இந்த நாட்டில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இது கடந்த 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை இருந்தபொருளாதார மந்த நிலைக்கு இணையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வணிகம் செய்வதற்கு உகந்த சூழல் இல்லை என்ற பொருளாதார குறியீடு 0.7% அதிகரித்துள்ளது.இந்த அளவு கடந்த மேமாதத்தில் 0.6%ஆக இருந்தது. இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமெரிக்காவில் இந்தாண்டின் 3-ஆவது காலாண்டில் பொருளாதார மந்த நிலை தொடங்கும் என்று கான்பரன்ஸ் போர்ட் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.உயர்த்தப்பட்ட பொருட்களின் விலைவாசி, கடன் பெறுவதில் சிக்கல், வணிகம் செய்வதற்கு அரசாங்கம் தரும் பணம் குறைப்பு ஆகியவையே அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பிட்ட பொருளாதார தரக்குறியீடானது. கடந்த டிசம்பர் 2022-ல் 3.8%ஆக இருந்தது. இது தற்போது அதாவது கடந்த 6 மாதங்களில் மட்டும் 4.2%ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் பொருளாதார மந்தநிலை நிச்சயமாக வரும் என்று அடித்துக்கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.