அசுர வேகத்தில் வளரும் மின்சார வாகனத்துறை …
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை.அதிகாரபூர் எண்ணிக்கை தெரிவிக்கின்றன. கடந்த 2020-21 ஆண்டில் 48 ஆயிரத்து179 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2021-22ம் ஆண்டில் 2லட்சத்து 37 ஆயிரத்து 811 ஆகவும், 22-23-ல் டிசம்பர் 9ம் தேதி வரை 4 லட்சத்து 42 ஆயிரத்து 901ஆகவும் உயர்ந்துள்ளது. மின்சார வாகன விற்பனை எந்த அளவுக்கு உள்ளது என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு,கனரக இயந்திரங்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே எழுத்துப்பூர்வ விளக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களுக்கு விரைவாக உற்பத்தி செய்யும் அமைப்புக்கு FAME என்று பெயர்.இந்த அமைப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மின்சார வாகனங்களை கடந்த 2019ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யத் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் 2024-ம் ஆண்டு வரை 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள்,55 ஆயிரம் கார்கள்,7090 மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களையும் தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த 9ம் தேதி வரை மொத்தம், 7 லட்சத்து 47 ஆயிரம் வாகனங்களுக்கு பதிவு நடைபெற்று உள்ளதாகவும் அவை விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.