வசூல்ராஜா பட பாணியில் மார்க்கையே கேள்வி கேட்ட பணியாளர்கள்..
லட்சங்களில் சம்பளம், டாலர்களில் வாழ்க்கை என பந்தா காட்டி ஐடி பணியாளர்களுக்கு இது சோதனை காலம் என்றே சொல்லலாம்.,அமெரிக்காவில் நிலவும் கடும் நிதி நெருக்கடி காரணமாக பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையில் ஆட்குறைப்புசெய்து வருகின்றனர். இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அண்மையில்தான் தனது பணியாளர்களில் 11 ஆயிரம் பேரை வேலை இல்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பியது. இதே நிறுவனம் தற்போது மேலும் 10 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மெட்டாவில் பணியாற்றி வரும் பணியாளர்கள் , மார்க் ஜூக்கர்பர்க்கிற்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் பேரு கால விடுப்பில் இருக்கும் பெண் பணியாளர்களை ஈவு இரக்கமின்றி வேலையை விட்டு தூக்கும் மார்க் ஜூக்கர்பர்க் தனது நிறுவனத்தில் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டாடாரா, இல்லையே ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். இரண்டாவது கட்டமாக நடக்கும் ஆட்குறைப்பில் குறைவான திறமை உள்ள பணியாளர்கள், அதிக முக்கியத்துவம் இல்லாத பிராஜக்ட்கள் காலியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பவர்களுக்கே வேலை இல்லை என்ற சூழலில் புதிதாக ஆட்களை எடுக்கவும்கடும் கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் முன்னெடுத்துள்ளது . ஆட்களையே வேலையில் இருந்து தூக்கி வருவதால் HRபிரிவுக்கும் கத்தி வீசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆபிஸ் வந்து வேலை செய்பவர்களுக்கே வேலை இருக்குமா என்ற சந்தேகம் உள்ளசூழலில் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்புள்ளவர்களை முதலில்
வேலையில் இருந்து தூக்கிவிடுவார்கள் என்ற அச்சம் பணியாளர்கள் மத்தியில் உள்ளது.