முடிவுக்கு வந்தது திமிங்கலத்தின் சகாப்தம்!!!!
விமானங்களை உருவாக்குவதில் சில நிறுவனங்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இதில் அரை நூற்றாண்டாக முன்னணியில் இருந்து வருவது போயிங் நிறுவனம், இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமெரிக்காவில் உள்ளது. வாஷிங்டனில் உள்ள உற்பத்தி ஆலையில் 1574-வது போயிங் 747 ஜம்போ ஜெட் வகை விமானத்தின் கடைசி விமானம் உற்பத்தி செய்யப்பட்டது அட்லஸ் ஏர் என்ற விமான நிறுவனத்துக்கு இந்த விமானம் தயாரித்து அளிக்கப்படுகிறது. இந்த விமானத்தை எலான் மஸ்க் வெகுவாக பாராட்டியுள்ளார்,இதுவரை தாம் பார்த்திலேயே சிறந்த விமானம் என்றும் அதனை புகழ்ந்துள்ளார் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் கபூர் தனது மறக்க முடியாத அனுபவத்தை புகைப்படமாக பதிவிட்டுள்ளார். 54 ஆண்டுகளுக்கு முன்பு ஜம்போ ரக விமானத்தின் முதல் விமான சேவையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சஞ்சீவ் கபூர் , அனைத்து நல்ல மற்றும் கெட்ட நேரத்திலும் இந்த விமானங்களை தாம் நினைத்துக் கொண்டிருப்பதாக டிவிட்டரில் கூறினார். 1969ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட இந்த விமானங்கள் , உலகிலேயே பெரிய விமானம் என்ற பெருமை கொண்டதாக இருந்தது. ஒரே நேரத்தில் 500 பேரை சுமந்தபடி இந்த விமானம் பறக்கும் திறமை கொண்டதாகும். இந்த விமானங்களை திமிங்கலம் என்றும் அழைப்பார்கள். இந்த விமானங்கள் திறமையானவையாக இருந்தாலும் அதிக எரிபொருள் தேவைப்படுவதால் வேறு விமானங்களுக்கு விமான சேவை நிறுவனங்கள் நகர்ந்துள்ளன. யுனைட்டட் மற்றும் டெல்டா ஆகிய நிறுவனங்களும்,பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் கொரோனாவுக்கு முன்பே, போயிங்க் 747 ரக விமானங்களை தவிர்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது.