மின்சார ஸ்கூட்டர் சந்தையில் பரபரப்பு..
சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருக்கும் வகையில் மின்சார ஸ்கூட்டர்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மின்சார ஸ்கூட்டர் தொடர்பான பொருட்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகையும் சில நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றன. ஆனால் பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் விற்கப்படும் பல ஸ்கூட்டர்களில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவி்ல் பிரபல மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஹீரோ நிறுவனம் 5 பில்லியன் ரூபாயை அரசிடம் திருப்பிக் கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம். ஏனெனில் அவர்கள் பல பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென வெடித்துச்சிதறிய மின்சார ஸ்கூட்டரில் உருவாக்கப்பட்ட பேட்டரிகள் எந்த நாட்டில் தயாரானவை என்ற விசாரணையின்போது இந்த சீன தொடர்பு தெரியவந்திருக்கிறது. சீனாவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் சில பொருட்களை இந்த மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்கள் வாங்கியதாக புகார்கள் எழுந்துள்ளன.ஒகினவா,ஏதர்,உள்ளிட்ட நிறுவனங்களிலும் இது தொடர்பான புகார்கள் குவிந்துள்ளன. தற்போதுள்ள படிம எரிபொருள் வாகனங்களால் மாசுபாட்டால் திணறும் சில நகரங்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் சிறந்த வரப்பிரசாதமாக உள்ளன. எனினும் போதிய சார்ஜிங் வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. உள்ளூரிலேயே உற்பத்தி ஆலைகள் இல்லாதபட்சத்தில், மின்சார வாகன உற்பத்தி கட்டமைப்பு கேள்விகளை எழுப்பியுள்ளது