காஸ்ட்லி காரை களமிறக்கும் பிரபல நிறுவனம்..
மாருதி சுசுக்கி நிறுவனம் என்பது இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு விருப்பமான கார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.இந்த நிறுவனம் தற்போது இன்விக்டோ என்ற பெயரில் புதிய காரை சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது.இந்த காரின் விலை 20 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது
டொயோடா கார்களில் இருப்பதைப் போல 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் சந்தைக்கு வந்தால் 15 முதல் 20 லட்சம்ரூபாய் செக்மன்டில் பெரிய வரவேற்பை பெறும் என்று அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 3 வரிசைகளில் சீட் அமைந்துள்ள கார்களை பொதுவாக MPVஎன்று அழைப்பார்கள், இந்த காரும் எம்பிவி வகையை சேர்ந்ததாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் வரும் 19ஆம் தேதி முதல் புக்கிங் தொடங்குகிறது. ஜூலை 5ஆம் தேதி இந்த கார் சந்தைக்கு வர இருக்கிறது.10-15 லட்சம் ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட கார்களின் விற்பனையில் மாருதி சுசுக்கி நிறுவனத்தின் பங்கு 30 விழுக்காடாக இருக்கிறது. 20 லட்சம் மற்றும் அதற்கு அதிக மதிப்பு கொண்ட கார்களின் பிரிவிலும் ஆதிக்கம் செலுத்த இருப்பதாக மாருதி சுசுக்கி நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹியூண்டாய்,கியா,மகிந்திரா,டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த புதிய கார் சந்தைக்கு வருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.