இறுதியானது முரட்டு டீல்..
இந்திய அரசாங்கத்தால் நடத்த முடியாமல் தடுமாறி வந்த ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமமே வாங்கி இயக்கி வருகிறது. இந்த நிலையில் அசுர வளர்ச்சியை காட்ட துடிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் மொத்தமாக 470 விமானங்களை வாங்க ஆர்டர் அளித்துள்ளது. இதற்கான இறுதி பணிகள் கடந்த 20ஆம் தேதி நிறைவுற்றன. ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும்,போயிங் நிறுவனத்திடம் 220 விமானங்களும் வாங்கப்பட இருக்கின்றன. பாரிசில் நடந்து வரும் விமான கண்காட்சியில் இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதற்காக 70 பில்லியன் அமெரிக்க டாலரை டாடா குழுமம் செலவிட இருக்கிறது. நவீன உலகத்துக்கு தேவையான பறக்கும் தேவைகளை இந்த டீல் அளிக்கும் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திர சேகரன் தெரிவித்துள்ளார். 140 A320neo, 70 A321neo single-aisle aircraft மற்றும் 34 A350-1000, ஆறு A350-900 wide-body jetகள் ஏர் இந்தியாவிடம் இருந்து வாங்கப்பட இருக்கின்றன. 737 MAX விமானங்கள்190 , 787 Dreamliner விமானங்கள் 20 , 777X jet வகையில் ஒரு 10,இவை தவிர 70 கூடுதல் விமானங்கள் ஆர்டர் தர வாய்ப்பு உள்ளது. அவற்றில் 737 MAX விமானங்கள் 50,787 Dreamliner விமானங்கள் 20 – ம் அடங்கும். 2025-க்குள் ஏர்பஸ் பெரிய டெலிவரியை அளிக்க இருக்கிறது. எரிபொருளை கணிசமாக மிச்சப்படுத்தும் புதிய தலைமுறை விமானங்களை வாங்க ஏர் இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சடையர் என்ற நிறுவனம்தான் ஏர் இந்தியாவின் விமானங்களை நிர்வகித்து பராமரிக்கும் பணிகளை செய்ய களமிறங்கியுள்ளது.