முதல்நாளே அட்டகாசமான தொடக்கம்
வர்த்தகத்தின் முதல்நாளான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.மே 8ம் தேதி பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.ரியல்எஸ்டேட், வங்கித்துறை, மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் நல்ல லாபத்தை சந்தித்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வெளியான தகவலால் முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கையுடன் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுகளை குவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தைகளில், குறிப்பாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 710 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 764 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 195புள்ளிகள் ஏற்றம் பெற்று 18ஆயிரத்து264 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இண்டஸ்இன்ட் வங்கி பங்குகள் 5விழுக்காடு வரை உயர்ந்தன.டாடா மோட்டார்ஸ்,பஜாஜ் பினான்ஸ்,பஜாஜ் பின்சர்வ் ஆகிய பங்குகளும் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் பெற்றன. கோல் இந்தியா, அதானி என்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய சரிவை பதிவு செய்தன இந்திய சந்தைகள் சரிந்து பின்னர் மீண்டு வருவது முதலீட்டாளர்களை நம்பிக்கையடைய வைத்திருக்கிறது.