ஆட்டம் அடங்கியது,ஓட்டம் பிடித்த முதலீட்டாளர்கள்!!!!
சர்வதேச அளவில் நிலவும் சாதக சூழலை பயன்படுத்தி இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 8 நாட்களாக பெரிய அளவில் ஆட்டம்போட்டன இந்தியப்பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சங்களை கடந்த சிலநாட்களை தொட்டு வந்த நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை, பானையை உடைத்து பொருளை முதலீட்டாளர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். கடந்த வியாழக்கிழமையை ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்தன,மொத்தம் 1% பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் சரிந்தன இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீ்ட்டு எண் நிஃப்டியும் 18 ஆயிரத்து 700 புள்ளிகளாக வீழ்ந்தது வங்கிகள்,நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் லாபத்தை உடைத்து எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். சந்தையில் ஆட்டோமொபைல் துறை பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வந்தன. இதன் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன.
இந்திய பங்குச்சந்தைகள் வரும் நாட்களில் உயரும் என கணிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பங்குகள் சரிந்தன இந்தியாவில் மட்டுமின்றி ஆசிய மற்றும் ஜப்பான், ஹாங்காங் பங்குச் சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. அமெரிக்க நிதிநிலையை பொருத்து வரும் நாட்களில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.