முக்கியமான 5ஆவது லிஸ்ட் வந்திருக்காம்..
அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டு,கிடைக்கும் வருமானத்தை மறைப்பவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப்பணத்தை குவித்து வைத்திருக்கின்றனர்.இவர்களின் பட்டியல் அவ்வப்போது அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5ஆவது பட்டியல் அண்மையில் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கிறது. 104 நாடுகளைச் சேர்ந்த 36 லட்சம் பரிவரித்தனைகள் குறித்த தகவல்களை ஸ்விஸ் வங்கி,மத்திய அரசுக்கு அளித்துள்ளதாம். இதில் பெரும்பாலும் அரசியல் பிரபலங்கள், தனிநபர்கள் மற்றும் கார்பரேட் அறக்கட்டளைகளின் விவரங்கள் சிக்கியிருக்கிறதாம். இதில் எத்தனை கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது என்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.இந்த 5ஆவது லிஸ்ட் கடந்த மாதம் வெளியாகியதாம். அடுத்த லிஸ்ட் அடுத்த வருஷம் செப்டம்பரில் அளிக்கப்போகிறார்களாம். கடந்த முறைகளில் அளிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத சில நாடுகளான கசகஸ்தான்,மாலத்தீவுகள்,ஓமான் உள்ளிட்ட நாடுகளின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன, இந்த பட்டியலில் ரஷ்யாவின் தரவுகள் எதுவும் இடம்பெறவில்லை. ஸ்விஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணம் குறித்த தரவுகளை வைத்து அந்தந்த நாடுகள்,முறையாக தங்கள் நாட்டில் வரி செலுத்தப்பட்டுள்ளனரா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
மொத்தம் 36 லட்சம் கணக்கு விவரங்கள் ஸ்விஸ் வங்கிகள் வாயிலாக பிற நாடுகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.இந்தியாவிடம் இந்த பட்டியலை ஸ்விஸ் அரசாங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கியது.அமெரிக்கா,பிரிட்டன்,ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு அமெரிக்க நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தொழிலதிபர்களின் தரவுகள் இந்த ஸ்விஸ் பட்டியலில் இருக்கிறதாம்.கருப்புப்பணத்தை பதுக்குவோரை கண்டறிவதற்கு அரசாங்கத்துக்கு உதவும் நோக்கில் இந்த பட்டியலை மத்திய அரசு கேட்டு வாங்கியுள்ளது வீடுகள், சொகுசு பங்களாக்கள் உள்ளிட்ட சொத்துகளின் பட்டியலும் இந்த 5ஆவது லிஸ்டில் இருக்கிறதாம்.