எச் பி பங்குகளை விற்ற ஜாம்பவான்…!!!
பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் நிறுவனமான பெர்க்ஷைர் ஹாத்வே, தனது வசம் இருந்த எச்.பி. நிறுவன பங்குகளை தொடர்ந்து விற்று வருகிறது. பிரபல எச்.பி நிறுவத்தின் 3 மில்லியன் பங்குகளை விற்று 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை திரட்டியுள்ளனர்.இது மட்டுமின்றி 5 மில்லியன் மற்ற பங்குகளையும் பெர்க்ஷைர் நிறுவனம் விற்றுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் எச்.பி நிறுவனத்தின் பங்குகள் 26 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் 14% விலை குறைந்திருக்கிறது.palo Alto நிறுவனத்தின் பங்குகள் கடந்த இலையுதிர் காலத்தில் 30 டாலராக இருந்தது. எச்.பி. நிறுவனத்தில் 12விழுக்காடு பங்குகளை பெர்க்ஷைர் நிறுவனம் கொண்டிருந்தது. தற்போது அது வெறும் 10%ஆக குறைந்திருக்கிறது. பபெட்டை பின்பற்றும் சிலர் பெர்க்ஷைரின் காலாண்டு முடிவு வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த பிப்ரவரி மாதம் வரை புதிய பரிவர்த்தனைகள் இருக்காது என்று கூறப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு, ஐபிஎம் நிறுவனத்தினைப் போலவே தற்போது எச்.பி. நிறுவனத்தை பபெட் நடத்துவதாக கூறப்படுகிறது.ஐபிஎம் நிறுவன பங்குகளை சிறிய லாபத்துக்காக விற்றிருக்கக் கூடாது என்று வாரன் பபெட் கடந்த 2018-ல் தெரிவித்தார். தொழில்நுட்ப நிறுவனங்களில் லாபத்தை பதிவு செய்வது என்பது நீண்டகாலம் எடுக்கும் ஒரு வேலை என்று வாரன் பஃபெட் நம்புகிறார்.ஆனால் ஆப்பிள் நிறுவனத்தில் செய்த முதலீடுகள் மட்டும் எப்போதும் லாபம் தருவதாகவும் அவரே பல இடங்களில் தெரிவித்துள்ளார். டெய்ரி குயின்,சீஸ் கேண்டி,ஹெல்ஸ்பர்க் வைரம் ஆகிய நிறுவனங்களிலும் வாரன் பஃபெட் முதலீடு செய்துள்ளார்.