பிரபல தொழிலதிபரின் மகளுக்கு ஏற்பட்ட நஷ்டம்!!!
இன்போசிஸ் நிறுவனம் உலகளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தை நாராயணமூர்த்தி மற்றும் அவரின் நண்பர்கள் துவங்கினர்.அண்மையில் பெரிய தொகையை இந்த நிறுவனம் லாபமாக அறிவித்தது. அதேபோல் மிகமோசமான சரிலவையும் அதாவது 11 விழுக்காடு வரையிலான பங்குகள் மதிப்பு குறைந்தது. திங்கட்கிழமை ஒரே நாளில் நாராயணமூர்த்தியின் மகளும் பிரிட்டன் பிரதமரின் மனைவியுமான அக்சதா மூர்த்தி 61 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்திருக்கிறார்.அக்சதாவுக்கு இன்போசிஸ் நிறுவன பங்குகள் சரிவால் மொத்த மதிப்பு 450 மில்லியன் டாலராகவும், அவரது மதிப்பு குறைந்துவிட்டது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக மிகப்பெரிய சரிவை இன்போசிஸ் நிறுவனம் சந்தித்துள்ளது. பெரிய பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளும் அடுத்தடுத்து சரிந்துள்ளன.எல்லா பெரிய நிறுவனங்களும் தங்கள் 4-ம் காலாண்டில் மிக மோசமான நிலையை வெளியிட்டு வருகின்றனர். இதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் பிரதிபலிக்கப்பட்டன.