பங்காளிக்கு அட்வைஸ் செய்த முக்கிய அமைப்பு…
கடுமையான கடன் சுமையால் தவிக்கும் பாகிஸ்தான் இன்னொரு இலங்கை போல பொருளாதார சிக்கலில் விழிபிதுங்கி நிற்கிறது. பாகிஸ்தானில் பெட்ரோல் , கோதுமை என அனைத்து பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் நாடாக செயல்படவேண்டுமெனில் இன்னும் கடுமையான விதிகளை வகுத்து வையுங்கள் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது. கிறிஸ்டலினா ஜார்ஜிவா ஜெர்மணியின் மியூனிக் நகரில் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்தார். அப்போது பாகிஸ்தான் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பாகிஸ்தானில் அதிகம் சம்பாதிப்போருக்கு கூடுதல் வரியும், குறைவாக சம்பாதிப்போருக்கு மானியமும் வழங்க வேண்டும் என்று கிறிஸ்டலினா கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச அளவில் பாகிஸ்தான் வாங்கியுள்ள கடன்களை திரும்ப அடைக்க வேண்டும் என்றும் ஐஎம்எஃப் கேட்டுக்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஏழை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள கிறிஸ்டலினா, ஏழையாக யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே பணம் அதிகம் வைத்திருப்போருக்கு சலுகைகள், கடன் தள்ளுபடிகள் தரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். ஐஎம்எஃப் அமைப்பு பாகிஸ்தானுக்கு பெரிய தொகையை கடனாக அளிக்க இருக்கிறது. இதனால் ஐஎம்எஃப் என்ன சொன்னாலும் அதற்கு பாகிஸ்தான் தற்போது தலையாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.