உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு..
செப்டம்பர் 5ஆம்தேதியான ஆசிரியர்தினத்தன்று,மும்பை பங்குச்சந்தைகள் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. அதாவது குறிப்பிட்ட இந்த பங்குச்சந்தையின், பங்குகளின் சந்தை மதிப்பு 316.64 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியது. 3நாட்களில் மட்டும் பெஞ்ச்மார்க் இன்டக்ஸ் புள்ளிகளில், 948 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.இதன் விளைவாக சந்தை மதிப்பு மட்டும் 7 லட்சம் கோடி ரூபாய் லாபமாக கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.அமெரிக்க சந்தைகளின் நிலையை பார்த்துக்கொண்டே வெளிநாட்டு முதலீடுகளை கவனிக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் தகவலாக இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிக ஆர்டர்களை ஆகஸ்ட் மாதம் பெற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை ஜப்பான் பங்குச்சந்தைகள் உயர்ந்தும், ஹாங்காங், சியோல் பங்குச்சந்தைகள் சரிவில் முடிந்தன.
சீனாவில் நிலவி வரும் பொருளாதார மோசநிலை காரணமாக அது சீனா மட்டுமின்றி மற்ற சந்தைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.