அதிகம் எதிர்பார்க்கப்படும் நான்கு நட்சத்திர IPO க்கள் !
இந்தியப் பங்குச் சந்தைக்கு 2020-21 நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இன்னும் முடிவடையவில்லை.
பங்குச்சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிஃப்டி 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் பெற்று புதிய உச்சத்தை அடைந்தது. பெரும்பாலான ஐபிஓக்கள் நல்ல லாபத்தை பெற்றன. பேடிஎம், ஃபின் பேமெண்ட்ஸ் வங்கி, ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ், கார் டிரேட் போன்ற சில பங்குகள் எதிர்பார்த்த லாபத்தை பெறத் தவறிவிட்டன.
இந்தியச் சந்தையில் ஐபிஓக்கள் இதுவரை 700 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக திரட்டியுள்ளது. இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைக்கு மிகப் பெரிய தொகையாகும்.
இந்தியப் மூலதனச் சந்தையின் முகத்தை மாற்றக் கூடிய 4 நிறுவனங்களின் ஐபிஓக்கள் தொடங்கப்படுகின்றன.
1.எல் ஐ சி
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி, 2048 கிளைகளுடன், பரந்த வலையமைப்புடன் கூடிய முகவர்கள் என்று மிகப் பெரிய நெட்வொர்க்கை உடைய இந்திய அரசு நிறுவனம். நாட்டின் காப்பீட்டு துறையில் பாதிக்கும் மேல் தன் கைவசம் வைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்புகளை கணக்கிடுவது கடினம்.
எல் ஐ சி யின் ஐபிஓ இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக கருதப்படுகிறது. ஐபிஓவில் அரசாங்கம் தனது முதலீட்டு நோக்கத்தை நிறைவேற்ற தனது கைவசமுள்ள பங்கில் 5 விருந்து 10 சதவீதம் வரை விற்கிறது. இந்த ஐபிஓ மூலம் அரசுக்கு ரூ.600 பில்லியன் முதல் ரூ.800 பில்லியன் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய அறிவிப்பில் இந்திய அரசு, எல்ஐசி ஐபிஓவின் 10 சதவீத பங்குகளை பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கியுள்ளது. பாலிசிதாரர் வகையின் கீழ், தகுதியுள்ள முதலீட்டாளர்கள் ஏலத்தின் போது ஐபிஓவுக்கு விண்ணப்பிக்கலாம்.
2. ஓலா
செபியிடம் இன்னும் வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் அடுத்த 6 மாதங்களில் வரைவறிக்கையை தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா கேப்ஸ் என்பது முதலடுக்கு, மற்றும் இரண்டு அடுக்கு நகரங்களில் செயல்படும் ஒரு வாடகைக் சேவை கார் நிறுவனமாகும். தனது சேவையை விரிவுபடுத்த 150 லிருந்து 200 கோடி ரூபாய்வரை திரட்டும் இலக்குடன் உள்ளது. அப்படி திரட்டும் பட்சத்தில் அதன் சொத்து மதிப்பு 1200 – 1400 கோடி ரூபாய் வரை இருக்கும்.
ஓலா லாபகரமானது. 2021 நிதியாண்டில் இது ரூ. 89.80 கோடியின் முழுமையான செயல்பாட்டு லாபத்தை ஈட்டியது, மூலதனத்தில் பாதியை பிரதானச் சலுகையாகவும், மற்றொரு பாதியை ஆஃபர் ஃபார் சேல்ஸ் மூலமாகவும் திரட்ட திட்டமிட்டுள்ளது.
3. டெல்லிவரி
குருகிராமில் உள்ள லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான டெல்லிவரியும் அடுத்த ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டிருக்கும் ஐடி நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
நிறுவனம் ரூ.7460 கோடி ஐபிஓவுக்கான வரைவு ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. டெல்லிவரி அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸில் (டிஆர்ஹெச்பி) புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ. 5,000 கோடியையும், விற்பனைக்கான சலுகை (ஓஎஃப்எஸ்) பாகத்தின் மூலம் ரூ. 2,460 கோடியையும் திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
4. பைஜூ’ஸ்
இந்தியாவின் மிகப்பெரிய எஜூடெக் நிறுவனமான பைஜூ’ஸ், அடுத்த ஆண்டு, 2022 இல் ஐபிஓவை வெளியிட திட்டமிடுகிறது. அதன் மூலம் மொத்தமாக 400 மில்லியனிலிருந்து 600 மில்லியன் டாலர்களைத் திரட்ட உத்தேசித்துள்ளது.
வரவிருக்கும் வாரங்களில், நிறுவனம் அதன் முன் ஐபிஓ நிதியை ரூ.2100 கோடி மதிப்பீட்டில் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயமாக ஈக்விட்டி மற்றும் கடனுக்கு இடையில் சமமாக பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைஜூஸ் தனது நிதியாண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே, அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் ஆரம்ப ஐபிஓவிற்கான தாக்கல்களை சமர்ப்பிக்க விரும்புகிறது.