டப்பா வர்த்தகம் செய்வோரை எச்சரித்துள்ள தேசிய சந்தை..
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பிளாஸ்டிக் பொருட்கள் பிராண்டாக டப்பர்வேர் வலம் வருகிறது. 1946ம் ஆண்டு earl tupper என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தங்கள் பொருட்கள் சந்தைக்கு சென்று,அது பழுதானால் மீண்டும் அதே பொருட்களை மறுசுழற்சி செய்து சந்தை படுத்துவதில் கெட்டிக்கார நிறுவனமாக ஒரு காலத்தில் வலம் வந்தது. கொரோனா வந்ததும் இந்த நிறுவனத்தின் சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அன்று விழுந்து இந்த நிறுவனத்தின் பங்குகள் திரும்ப எழும்பவே இல்லை. மக்கள் வீடுகளுக்குள்ளேயே கிடந்ததால் வேலைகளுக்கு டப்பாவில் சாப்பாடு எடுத்துச்செல்வது குறைந்து போனது. இந்த நிலையில் தங்கள் வியாபாரம் மிகமோசமான பாதிப்பை சந்தித்துள்ளதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த நிறுவனத்தை நம்பி முதலீடு போட்ட ஒவ்வொருவரும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். நிதி நிலை என்ன, எவ்வளவு நஷ்டம் என அடுக்கடுக்கான கேள்விகளால் விழிபிதுங்கி போயிருக்கும் டப்பர்வேர் நிறுவனம் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் தங்கள் முதலீடுகளை நிறுவனம் என்ன செய்கிறது என்றும் முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்கமான பாரம்பரிய முறையில் டப்பாக்களை விற்க முடியாமல் அந்த நிறுவனம் தடுமறி வருகிறது. மேலும் ஆன்லைனில் டப்பர்வேர் நிறுவனத்தைவிட மிக மேம்படுத்தப்பட்ட பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் டப்பர்வேரை மறந்தே போய்விட்டனர். இதனால் அந்த நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.