அமெரிக்காவுக்கு வந்த அவல நிலை..!!
உலகின் பெரிய பொருளாதார நாடாக திகழும் அமெரிக்காவுக்கே தற்போது நேரம் சரியில்லை என்றால் சரியாக இருக்கும். அந்நாட்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் இரண்டாவது காலாண்டு உள்நாட்டு உற்பத்தி வெறும் 2.1%மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அளவு 2.4%ஆக கணிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் இருந்து சில பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக குறைந்திருப்பதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. முதல் காலாண்டில் 2%ஆக இருந்த இந்த உற்பத்தி, தற்போது 2.1%ஆக உள்ளது. அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தவிர்த்து மற்ற துறைகளின் முதலீடு 6.1%ஆக இருக்கிறதாம்.அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முயற்சிகளால் பணவீக்கம் குறைந்தாலும்,பொருளாதார மந்த நிலை பாதிப்பு அதிகமாகவே உள்ளது. பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் அமெரிக்க பங்குச்சந்தைகளில் நல்ல ஏற்றம் காணப்பட்டு வருகிறது. ஆனால் நாஸ்டாக்,டவ் ஜோன்ஸ் , மற்றும் S&P500 என்ற பங்குச்சந்தைகளில் இந்தமாதத்தில் மாறிமாறி ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. அண்மையில் 2 விழுக்காடு வரை சந்தைகளில் சரிவு இருக்கிறது.