இந்த கார்கள் விலை ஏறப்போகுது..என்ன கார் தெரியுமா?
தென்கொரியாவுக்கும் இந்தியாவுக்கும் நிறைய தொடர்பு உள்ள நிலையில் கியா கார் நிறுவனம் இந்தியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்து வருகிறது. கியா இந்தியா நிறுவனம் தனது புதிய ரக கார்களின் விலைகளை உயர்த்த இருப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. கியா நிறுவனத்தில் செல்டாஸ்,காரன்ஸ் ஆகிய ரக கார்களின் விலை வரும் 1 ஆம் தேதி முதல் 2விழுக்காடு உயர்த்தப்படுகிறது. சோனட் ரக கார்கள் விலை உயராது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 1 ஆம் தேதி முதல் கியா நிறுவன கார்களின் விலை 2 விழுக்காடு உயர்வதை அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைவர் ஹர்தீப் பிராரும் உறுதி செய்திருக்கிறார்.இந்த நிறுவனத்தின் கார்களின் விலை கடந்த ஏப்ரல் மாதம்தான் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்கிறது.மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ள நிலையில் ,கியா செல்டாஸ் ரக கார்களுக்கு அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,வேறு வழியின்றி விலையை ஏற்றுவதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கியா நிறுவனம் படிம எரிபொருள் வாகனங்கள் மட்டுமின்றி மின்சார கார்களையும் தயாரித்து வருகின்றன. புதிதாக அந்நிறுவனம் EV6 என்ற ரக காரையும் உற்பத்தி செய்து சந்தைபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.