அடுத்த மாதம் குறைகிறதாம் தக்காளி விலை…
ஜூலை மாதத்தின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது. இதன்படி ஜூலை மாதத்தில் தக்காளி விலை அதிகரித்து இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல்வாரத்தில் தக்காளி வரத்து அதிகரித்து விடும் என்று கூறியுள்ள அந்த அறிக்கை. கடந்த மாதம் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் வெள்ளை பூச்சு தாக்கம் காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு சில்லறை பணவீக்கம் கடந்த மாதம் 3ஆவது அதிகமாக கணிசமாக உயர்ந்ததை கூறியுள்ள அந்த வங்கி, வடமாநிலங்களில் பருவம் தவறி பெய்யும் கனமழையையும் காரணமாக கூறியுள்ளது. 14 உணவுப்பொருட்களின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததாக கூறியுள்ளது. வரும் நாட்களில் தக்காளி விலை கணிசமாக குறையும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு ஆகியவற்றின் விலை கிட்டத்தட்ட 50 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. பல இடங்களில் பயிரிட்ட காய்கனிகள் விளைச்சலை தர ஆரம்பித்துவிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் சேவைசார்ந்த துறைகளும் வேகமெடுத்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலகளாவிய பிரச்னைகள் உணவுப்பொருட்கள் விலையை உயர்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.