உண்மையான சிக்கலே இனிதான் இருக்கு…!!!
அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் வரலாறு காணாத வகையில் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக அமெரிக்கா மட்டுமின்றி உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. இது குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவெல் கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் முன்பு எதிர்பார்த்ததைவிட அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார். பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டதை போல லேசான சரிவு காணப்பட்டாலும் கடந்த ஜனவரி மாத தரவுகள் அதிரவைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.உற்பத்தி பாதிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை காரணமாக கூறியுள்ள பாவெல்.தேவை ஏற்படும்பட்சத்தில் தற்போதுள்ளதைவிட அதிக வட்டி விதிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் அமெரிக்க பங்குச்சந்தைகளில் 0.6% சரிந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அமெரிக்க பெடரல் ரிசர்வு 8 முறை கடன்கள் மீதான வட்டியை உயர்த்தி இருக்கிறது. உள்ளூர் மக்கள் உழைக்கும் திறனை அதிகப்படுதத வேண்டுமெனவும், விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பெடரல் ரிசர்வின் நடவடிக்கையை அடுத்து அமெரிக்க ரியல் எஸ்டேட் துறை கணிசமான சரிவை சந்தித்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவித்துள்ளார்.