சந்திரயான்-3 திட்டத்தில் இத்தனை நிறுவனங்களின் பங்கா?
உலகில் எந்த நாடுகளும் நிலவில் தரையிறங்காத தென் துருவத்தில் இந்தியா தரையிறங்கியிருக்கிறது.நிலவில் கால்பதிக்கும் 4ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த சந்திரயான் -3 திட்டத்துக்கு பலரும் தங்கள் பங்களிப்பை செய்திருக்கின்றனர்.
சந்திரயான்-3க்கு முக்கிய உதிரி பாகங்களை செய்து கொடுத்ததில் L&T நிறுவனத்தின் பங்கும் உள்ளது. சந்திரயானின் பூஸ்டர்களுக்கான உபகரணங்களை இந்த நிறுவனம்தான் உருவாக்கி தந்திருக்கிறது. புரொபலென்ட் எனப்படும் உந்து சக்திக்கான உபகரணங்களை டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடட் நிறுவனம் செய்திருக்கிறது. இதேபோல் ஐதராபாத்தைச்சேர்ந்த மிஸ்ரா தத்து நிகாம் என்ற நிறுவனம்கோபால்ட்,நிக்கல் உள்ளிட்ட அலாய்களை செய்து தந்திருக்கிறது.
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம்,சந்திரயான்-3க்கு தேவையான பேட்டரிகளை செய்திருக்கிறது. வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனமும் பை மெட்டாலிக் அடாப்டர்களை உருவாக்கி தந்திருக்கிறது. இன்ஜின், பூஸ்டர் பம்புகளை MTAR டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் செய்து தருகிறது.இன்ஜின் திரஸ்டர்ஸ் என்ற பாகத்தை காத்ரேஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உற்பத்தி செய்திருக்கிறது.அங்கிட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் டைட்டானியத்தில் செய்யப்பட்ட போல்ட்களை உருவாக்கித் தந்திருக்கிறது. வால்சந்த்நகர்இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பூஸ்டர்களையும், S200flex nozzleகளை கட்டுப்படுத்தும் டேங்கேஜ்களையும், உபகரணங்களையும் அளித்துள்ளன.