ஆட்டம் போட்ட பங்குகள் விழுந்து சிதறின..
மே 16ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் பெரிய சரிவை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 413 புள்ளிகள் சரிந்து 61 ஆயிரத்து932 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 286 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. ஆட்டோமொபைல்,மருந்து மற்றும் வங்கித்துறை பங்குகளில் ஏற்பட்ட சரிவே இந்திய பங்குச்சந்தைகளில் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய இந்திய சந்தைகள், முதல் இரண்டு மணி நேரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்தது. பின்னர் கடைசி நேர வர்த்தகத்தில் பங்குகளை அதிகம் விற்றதால் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்தன. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 715 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 78 ரூபாய் 80 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டிவெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் அதிகிர்தது 78 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கே கூறப்பட்டுள்ள விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும்,செய்கூலியும் சேதாரமும் சேர்க்கவேண்டும், கடைக்கு கடை செய்கூலி சேதாரம் மாறுபடும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.