சப்தமின்றி கிடந்த பங்குச்சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகளில் நவம்பர் 23ஆம் தேதி அன்று பெரிய ஏற்ற இறக்கம் இன்றி முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 5 புள்ளிகள் சரிந்து 66,017 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9புள்ளிகள் சரிந்து 19, 802 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. Hero MotoCorp, Bajaj Auto, BPCL, Eicher Motors, IndusInd Bankஆகிய நிறுவன பங்குகள், நிஃப்டியில், பெரிய லாபத்தை பதிவு செய்தன. Cipla, UltraTech Cement, LTIMindtree, SBI Life Insurance, Larsen & Toubroஆகிய நிறுவன பங்குகள் பெரிதாக சரிவை கண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை,ரியல் எஸ்டேட்துறை, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறை பங்குகள் சுமார் 0.4 % வரை விலை உயர்ந்திருக்கின்றன. சுகாதாரத்துறை பங்குகள்1 விழுக்காடும், தகவல் தொழில்நுட்பம் அரை விழுக்காடு வரையும் விலை குறைந்தன. PCBL, Praj Industries, Sunteck Realty, Hero MotoCorp, Bajaj Auto, Hitachi Energy, BPCL, TVS Motor Company, Varun Beverages, Balrampur Chini, உள்ளிட்ட 250 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 45920 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் தங்கம், 10 ரூபாய் விலை உயர்ந்து 5740 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 200 ரூபாய் உயர்ந்து 79ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான சரக்கு மற்றும் சேவை வரியும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனிக்கவும்.