ஒரு பிரபல பேங்கரின் கதை..
HDFC வங்கியின் முன்னாள் MD மற்றும் CEO ஆன ஆதித்யா பூரியின் வாழ்க்கை பயணத்தை ஆதித்ய நாமா என்ற பெயரில் ஆதித்யாவின் மனைவியான அனிதா பூரி புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் பலரின் விருப்ப புத்தகங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த புத்தகத்தில் ஆதித்யா பூரியின் வாழ்க்கை பயணம், அவரின் கடினமான தருணங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில் இந்த புத்தகம் குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆதித்யாவும், அனிதாவும் தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். அதில் பேசிய ஆதித்யா பூரி, சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நினைவுகளை பேசினார். மேலும் சம்பளம் குறைவாக இருந்தாலும் ஏன் சிட்டி வங்கியை விட்டுவிட்டு HDFCக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் வரும் காலகட்டத்தில் ஏழை மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். உலகமே வங்கிகள் திவாலாவதால் அஞ்சி வரும் நிலையில் இந்திய வங்கிக் கட்டமைப்பு வலுவாக இருப்பதாகவும், இந்தியர்களை பார்த்தே பிறர் கற்றுக்கொள்ளும் சூழல் இருப்பதாகவும் ஆதித்யா கூறியுள்ளார். ஒரு நாள் இந்தியாவின் முக்கிய வங்கியை தாம் நிர்வகிப்பேன் என்று மனைவி அனிதாவிடம் கூறியதாகவும் அது தற்போது நிறைவேறியிருப்பதாகவும் ஆதித்யா பூரி குறிப்பிட்டு சிலாகித்துள்ளார்.