பணத்தை கட்டுப்படுத்திய தாலிபான்கள்…

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிகளவில் தரப்படும் வெளிநாட்டு நிதி, மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை வலுப்படுத்தியதன் மூலம் பணத்தின் மதிப்பை சரியாக அந்நாடு கட்டுப்படுத்தி வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தை சட்டவிரோதமாக்கிய அந்நாடு, அதை செய்வோருக்கு சிறை தண்டனையையும் விதித்துள்ளது. நடப்பு காலாண்டில் மட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டு பணத்தின் மதிப்பு 9% உயர்ந்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானின் பணத்தின் மதிப்பு 14%உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாடுகளின் தடை விதிக்கப்பட்டாலும் பணத்தை கட்டுப்படுத்தும் நுட்பத்தை தாலிபான்கள் தெரிந்து வைத்துள்ளனர். பணத்தை கட்டுப்படுத்தத் தெரிந்த தாலிபான்களுக்கு சமூக அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த தெரியவில்லை என்று விமர்சனமும் எழுந்துள்ளது.பாகிஸ்தான் வழியாக அமெரிக்க டாலர்களை கடத்தும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில வங்கிகள் இவ்வளவுதான் பணம் வங்கிகளில் இருந்து எடுக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.பல்வேறு கட்ட நடவடிக்கைகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆப்கானி பணத்தின் மதிப்பு தற்போது 78.50 ரூபாயாக இருக்கிறது.