டெஸ்லாவுக்கு வந்த சோதனை…
உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட மின்சார கார்களாக டெஸ்லா நிறுவன கார்கள் பார்க்கப்படுகின்றன.இந்த கார்களை பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்து டெஸ்லா நிறுவனம் ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்த சூழலில் டெஸ்லாவின் கார் ஆலைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருவதால் திட்டமிட்டபடி டெலிவரி தர முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் உலகின் பல்வேறு நிறுவனங்களும் மின்சார கார்கள் உற்பத்தித்துறையில் களமிறங்கியுள்ளதால் டெஸ்லா நிறுவன கார்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்திருக்கிறது. இதனால் கூடுதல் டிஸ்கவுண்ட்களை டெஸ்லா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள ஆலைகள் மூடப்பட்டு, அங்கு ஆலையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.புதிதாக மாடல் 3 ரக கார்கள் மற்றும் சைபர் டிரக் வகை வாகனங்கள் இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.வரும் காலாண்டில் வலுவான ஏற்றத்தை டெஸ்லா சந்திக்க வாய்ப்பிருந்தாலும், தற்போதைய சூழலில் பெரிய பாதிப்பை அந்நிறுவனம் சந்தித்து வருகிறது. மொத்தம் 4 லட்சத்து 58ஆயிரம் வாகனங்கள் டெலிவரி செய்ய வேண்டிய இடத்தில் 4 லட்சத்து 39 வாகனங்கள் மட்டுமே இதுவரை விற்கப்பட்டுள்ளன. வரவேற்பை அதிகரிக்க டெஸ்லா நிறுவனம் விலைகளை குறைக்கத்தான் வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேம்படுத்தப்பட்டுள்ள மாடல் 3 ரக டெஸ்லா கார்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு மிக அதிகளவில் உள்ள நிலையில் விரைவில் இந்த சிக்கல் தீரும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட வாகன எண்ணிக்கையை டெலிவரி செய்ய இயலாத காரணத்தால் டெஸ்லா நிறுவன பங்குகள் 5%வரை சரிந்தன.