வெள்ளக்காரனுக்கு வந்த சோதனை…
உலக நாடுகள் அனைத்துக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்துவது பணவீக்கமாக இருக்கிறது.பணவீக்கம் அதிகரித்து வருவதால் செலவுகள் அதிகரிப்பதால் பிரிட்டனில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இந்த சிக்கல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுவனங்களின் செயல்திறன் கணிசமாக பிரிட்டனில் குறைந்து வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு இருந்த நிலையைவிட அதிகளவில் வேலையிழப்பு நேரிட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இங்கிலாந்து வங்கி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டனில் வேலையிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக எஸ்.பி. என்ற நிறுவனம் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.பிரிட்டனில் வசிப்பதற்கான செலவு தொடர்ந்து உயர்ந்து வருவதும் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.பிரிட்டன் வங்கிகளுக்கு மத்திய வங்கி அளிக்கும் கடனின் அளவும் அதிகம் என்பதால் பிரிட்டனில் கடன்களுக்கான வட்டி மிக மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது.பிரிட்டனில் பண வீக்கம் என்பது இதுவரை அந்நாடு சந்திக்காத அளவுக்கு உள்ளதாகவும் எஸ் அண்ட் பி நிறுவனம் கூறியுள்ளது…