ஊருக்கு போன தக்காளி இன்னும் திரும்பல..
பர்கர் கிங் என்ற நிறுவனம் சான்விட்ச், மற்றும் பர்கர்களுக்கு மிகவும் பெயர்பெற்ற நிறுவனமாகும். இந்த நிலையில் பர்கர் கிங் நிறுவனம் இந்திய தக்காளிகளை பற்றி பதிவு செய்துள்ளது. அதாவது இந்தியாவில் பர்கர்கிங் நிறுவனத்தில் தக்காளிகள் விடுப்பில் சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.பல இடங்களில் சரியான தக்காளிகள் கிடைக்கவில்லை.இதையடுத்து தக்காளிகளை தங்கள் மெனுவில் இருந்து நீக்கியுள்ளன. இந்தியா முழுவதும் 400க்கும் அதிகமான கடைகளை பர்கர் கிங் நிறுவனம் நடத்தி வருகிறது.2020 ஜனவரிக்கு பிறகு மீண்டும் தற்போது தக்காளிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனவே மெக்டொனால்டும், சப்வே நிறுவனமும் தக்காளி இல்லை என்ற கிளப்பில் இணைந்துள்ளன. சீஸ் துண்டுகளை ஏற்கனவே பர்கர் கிங் நிறுவனம் நிறுத்தியுள்ளது டாமினோஸ் வகை பீட்சாக்களோ எப்படி குறைவான விலையில் விற்கமுடியுமோ அவ்வளவு குறைவாக செய்ய வேண்டும் என்று தீவிர முயற்சி செய்துவருகிறது. தக்காளி விலை விண்ணை முட்டியுள்ளதால் வெளநாட்டு நிறுவனங்கள் தக்காளியை தங்கள் மெனுவில் அழித்தனர். தக்காளி விலை கிட்டத்தட்ட 450 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாலும், ஜூலை மாதத்தில் பிற காய்கனிகளின் விலை உயர்ந்ததாலும் இந்த சிக்கல் நேரிட்டுள்ளதாக பர்கர்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலவும் தக்காளி விலை உயர்வை அடுத்து நேபாளத்தில் இருந்தும் தக்காளியை இறக்குமதி செய்ய மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறகது.