விர்ஜினுக்கு வந்த சோதனை!!!
அமெரிக்காவில் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். அமெரிக்காவில் நிலைமை மோசமாக இருப்பதை உணர்த்தும் வகையில் டெக் நிறுவனங்கள் மட்டுமின்றி, விமானங்கள், தனியார் நெட்வொர்க் நிறுவனங்களும் மிகப்பெரிய சரிவுகளை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் விர்ஜின் ஆர்பிட் என்ற நிறுவனம் தனது செயல்பாட்டை முழுமையாக நிறுத்தும் அளவுக்கு நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது என்று சொல்ல வேண்டும். இது பற்றி அந்த நிறுவனத்தின் சிஇஓ டான் ஹார்ட் தனது பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குரல் தழுதழுக்க பேசிய அவர், போதுமான அளவுக்கு நிதியும், முதலீட்டாளர்களும் இல்லாததால் இந்த திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்துக்கு போதிய நிதி இல்லாததால் கிட்டத்தட்ட முழுமையாக அதன் சேவைகள் நிறுத்தப்படுகின்றன. 675 முக்கிய பணியிடங்களில் இருந்த அனைவரையும் வீட்டுக்கும் அனுப்புவதாக கூறியுள்ள அந்நிறுவனம், தனது பணியாளர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதியையும், விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தில் பணிமாற்றுதலும் தருவதாக கூறியுள்ளது.