தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு..
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து தரிந்து வருகிறது. அமெரிக்க டாலர் அமெரிக்காவில் வலுவடைந்து வருவதாலும், அங்குள்ள பத்திரங்கள் வலுவாக இருப்பதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனை சரி செய்ய ரிசர்வ் வங்கி பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. டாலர் விற்பனையில் ரிசர்வ்வங்கி ஈடுபடுவதால்தான் ஓரளவு நிலைமை சீரடைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த புதன் கிழமை 83.24 ரூபாயாக உயர்ந்தது.ஆசிய அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான கொரியாவின் பணம் 1 விழுக்காடு வரை வீழ்ந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க கருவூல வருவாய் 5%ஆக உயர்ந்திருக்கிறது.இதேபோல் ஜெர்மனியின் பத்திரங்களும் 10 ஆண்டுகளில் 3%ஆக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் தொழிலாளர்கள் சந்தை தரவுகள் வெளியாக இருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடைசியாக கடந்தாண்டு அக்டோபரில் மிகக்குறைவான அளவை எட்டியது.
அக்டோபர் 2022-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83புள்ளி 29 ரூபாயாக இருந்தது. இதுவே மிகக்குறைவான அளவாக இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் ஏற்றுமதி செய்வோருக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. உரிய நேரத்தில் ரூபாயின் மதிப்பை உயர்த்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.