எக்ஸ் மதிப்பு கடும் வீழ்ச்சி…
கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார்,உங்கக்காவ கட்டுறதுக்கு முன்னாடி 50 ஏக்கர் வச்சிருந்தேன், இப்போ அரைக்காணிக்கு சிங்கி அடிக்கிறேன் என்று. இப்போது மஸ்கின் நிலையும் கிட்டத் தட்ட அதே நிலைதான். ஒரு வருடத்துக்கு முன்பு டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மஸ்க் வாங்கியிருந்தார். ஆனால் தற்போது எக்ஸ் என்று பெயர் மாற்றப்பட்ட நிலையில்,அந்த நிறுவனத்தின் மதிப்பு 19 பில்லியன் டாலராக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய பணியாளர்களை குறைத்தது, நிறுவனத்தின் பெயரையே எக்ஸ் என்று மாற்றியது.உள்ளடக்க விதிகளில் மாற்றம் செய்தது உள்ளிட்டவை எக்ஸ் நிறுவன பங்கு மதிப்பு சரிய முக்கிய காரணமாக இருக்கிறது. அந்நிறுவன சேல்ஸ் 60% சரிந்துள்ளது, கடன்களுக்கான வட்டியாக மட்டும் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஓராண்டில் செலுத்தியுள்ளார். 54.20டாலர்களாக ஒரு பங்கை வாங்கிய மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது அதிக தொகை என்றும் தெரிவித்தார்.அந்த நிறுவனத்தின் மதிப்பே 20 பில்லியன் டாலர்தான் என்றும் அவரே பேசியிருந்தார். டிவிட்டர் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வெறும் 1%மக்கள் மட்டுமே டிவிட்டருக்கு பணம் செலுத்தி வருகின்றனர். அனைத்துக்குமான செயலியாக எக்ஸை மாற்ற நினைக்கிறார் மஸ்க், ஆனால் நடப்பதோ வேறாக இருக்கிறது. மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியது முதல் இதுவரை 80%ஊழியர்கள் வெளியேறிவிட்டனர்.