சீன நிறுவன பங்கை குறைத்த வாரன் நிறுவனம்
உலகளவில் முதலீடு செய்வதில் மிகப்பெரிய வல்லவராக வாரன் பஃபெட் திகழ்கிறார். இவரின் நிறுவனமான பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து பல நிறுவனங்களை முன்னேற வைத்திருக்கிறது. இந்நிலையில் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம், பிரபல சீன மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி நிறுவனத்தின் பங்குகளில் இருந்து முதலீடுகளை குறைத்து வருகிறது. இது டெஸ்லாவின் பங்களிப்பைவிடவும் குறைவாக மாறியுள்ளது. அண்மையில் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிஒய்டி நிறுவனத்தின் 13 லட்சம் பங்குகளை 39.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை வாரனின் நிறுவனம் விற்பனை செய்துவிட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் மொத்த பங்கில் 7புள்ளி பூஜ்ஜியம் இரண்டில் இருந்து ஆறு புள்ளி 90 விழுக்காடு அளவுக்கு அந்நிறுவன பங்குகளில் வாரனின் நிறுவன பங்குகள் அளவு குறைந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பஃபெட்டின் நிறுவனம் பிஒய்டியில் முதலீடு செய்திருக்கிறது. 22கோடியே 50 லட்சம் பங்குகளுக்கு 230மில்லியன் அமெரிக்க டாலர்களை பஃபெட்டின் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது 10 விழுக்காடு பங்களிப்பாகும். கடந்த 2022 முதல் பிஒய்டி நிறுவனத்தின்பங்குகளை வாரனின் நிறுவனம் விற்கத் தொடங்கியுள்ளது. ஜூன் 2022-ல் உச்சம் தொட்ட அந்நிறுவத்தின் பங்குகள் பின்னர் 30 விழிக்காடு வரை சரிவை கண்டது. கடந்த ஏப்ரலில் பிஒய்டிக்கு போட்டியாக டெஸ்லா நிறுவனம் முதலிடத்தை பிடித்தது. 2023 ஆண்டு கூட்டத்தில் பெர்க்ஷைர் செய்த முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிஒய்டியில் முதலீடு செய்யும்படி மறைந்த சார்லி தன்னிடம் பல முறை சொன்னதாக வாரன் அந்த கூட்டத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.