முதலீட்டாளர்கள் பாக்கெட்டை பதம் பார்த்த வாரம்.. எவ்வளவு நஷ்டம் தெரியுமா!!!
சீனாவில் நிலவும் கொரோனா சூழல், உலகளவில் நிலவும் நிலையற்ற சூழலின் அச்சம் ஆகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ந்துள்ளன. வர்த்தகம் நடைபெறும்போது கடந்த 7 பகுதிகளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் பணம் இழப்பு ஏற்பட்டது இந்திய பங்குசந்தைகள் சரிவு தொடர்ந்ததால் வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் 980 பங்குகள் குறைந்து, மும்ப பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வீழ்ந்தது இதேபோல தேசிய பங்குச்சந்தையிலும் வீழ்ச்சி காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 320 புள்ளிகள் விழுந்துவிட்டது. 17ஆயிரத்து 806 புள்ளிகளுடன் வர்த்தகம் சரிவடைந்தது. கடந்த டிசம்பர் 14ம் தேதி மும்பை பங்குச்சந்தையின் சந்தை மூலதன மதிப்பீடு 291 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது இந்த மதிப்பு 275 லட்சம் கோடியாக வீழ்ந்துள்ளது பெஞ்ச்மார்க் இன்டக்ஸ் எனப்படும் பண்ட்களின் விலை 4 முதல் 5 விழுக்காடு வீழ்ச்சி கண்டுள்ளது.
வரும் ஆண்டு இதேபோல ரோலர் கோஸ்டர் ஏற்ற இறக்கம் சந்தையில் இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதிகரித்து வரும் பணவீக்கம், பணப்புழக்கம் குறைந்தது, ஆட்குறைப்பு உள்ளிட்ட காரணிகள் சர்வதேச சந்தையை ஆட்டம் காணவைத்துள்ளது.மிகமுக்கிய காரணியாக கொரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது.ஆசிய பங்குச்சந்தையும்,ஜப்பானிய பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன.