6 நல்ல விஷயங்கள் இருக்காம்!!! என்ன அவை?
ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தது நல்ல விஷயம் என்று முன்னாள் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது முதலாவதாக பதுக்கல் பணத்தை தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்று தெரிவித்துள்ளார்.இந்த முயற்சி சாதாரண மக்களை எந்தவகையிலும் பாதிக்காது என்றும் மக்கள் எல்லாரும் டிஜிட்டல் பணத்துக்கு மாறிவிட்டதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை யாரும்பெரிதாக நாடுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கான தேவை முற்றாக குறைந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மும்மடங்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 4 மாதங்களில் தாராளமாக சாதாரண பொதுமக்களை மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இனி 500 ரூபாய்தான் அதிக புழக்கத்தில் இருக்கும் என்பதால் அதனையே மக்கள் அதிகம் விரும்புவார்கள் என்றும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மூத்த பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்தத்தி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை இருந்துள்ளார்.ஒட்டுமொத்தமாகவே 2 ஆயிரம் ரூபாய்நோட்டுகள் திரும்பப்பெறும் முயற்சி மிகப்பெரிய நல்ல விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 20 விழுக்காடு மக்கள் கருப்புப்பணத்தை பதுங்கி வைத்திருந்தாலும் அதன் மதிப்பு மிகவும் அதிகம் என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.