மிரட்ட வரும் டொயோடா!!!
ஷங்கர் பட பிரமாண்டத்தை போல பெரிய கார்களுக்கு பெயர் பெற்ற நிறுவனம் டொயோடா. இந்த நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கு இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சூழலில் கால நிலைக்கு தகுந்தபடி அடுத்த 3 ஆண்டுகளில் 10 புதிய மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுவும் ஒன்றிரண்டு அல்ல 15 லட்சம் கார்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லெக்சஸ் உள்ளிட்ட சில மாடல்கள் உலகளவில் 25 ஆயிரத்துக்கும் குறைவான பேட்டரி வாகனங்கள் மட்டுமே இந்த நிறுவனம் விற்றுள்ளது. அந்த நிறுவனம் மின்சார கார்களுக்கான சந்தையில் பின்தங்கியதால்தான் டெஸ்லா நிறுவனம் வளர்ந்துவிட்டதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வெறும் மின்சார கார்கள்தான் விற்கவேண்டும் என்பதில்லாமல், எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்கள்தங்கள் திட்டத்தில் உள்ளதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவிலும் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள டொயோடா நிறுவன அதிகாரிகள், உலகளாவிய சந்தையில் மின்சார பேட்டரி வாகனங்களை அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் டொயோடாவின் விற்பனை 9விழுக்காடு சரிந்துள்ளது. அதே நேரம் ஜெனரல் மோட்டார்ஸின் விற்பனை 18விழுக்காடு உயர்ந்துள்ளது.