அமெரிக்காவுக்கு பிர்சனை வர இருக்கிறதாம்..
அமெரிக்காவில் பிரபல கோடீஸ்வரரும்,முதலீட்டாளருமான ரே டாலியோ பல ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில் அவர் அமெரிக்காவுக்கு கடன் பிரச்னை விரைவில் வர இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். Bridgewater Associates என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ரே டாலியோ, அமெரிக்காவுக்கு வர இருக்கும் கடன் பிரச்னை குறித்து ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் கடன் அளவானது 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ள நிலையில் ரே டாலியோவின் கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்காவே கடனில் உள்ள நிலையில் புதிதாக எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்ட நிபுணர்களும்,எம்பிகளும் வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இவ்வளவு பிரச்னைக்கு மத்தியிலும் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது. இதுவரை 43 பில்லியன் டாலர் வரையிலான நிதியை அமெரிக்கா அளித்துள்ளது.ஏற்கனவே கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் கடந்த 2019 முதல் 2021 வரை 50%க்கும் அதிகமான தொகை கடனாக உயர்ந்துள்ளதாகவும் ரே டாலியோ கூறியுள்ளார். வட்டி உயர அதிகவாய்ப்பிருப்பதாக கூறியுள்ள அவர்,இதற்கு முன்பு கணித்தவை அனைத்தும் சரியாக இருந்திருப்பதால் இவரை பின்தொடரும் மக்கள் ஒரு வித விழிப்புணர்வுடனேயே இருக்கின்றனர்.