வரும் தம்பி… ஆனா வராது… என இழுத்த அதிகாரியால் பரபரப்பு!!!
2008ம் ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவுக்கு லேமன் பிரதர்ஸ் என்ற நிறுவனம் காரணமாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதாக சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கியின் சரிவு காணப்பட்டது.இந்த இரண்டு வங்கிகளும் ஆட்டம் கண்டதால் அமெரிக்க நிதி நிலைமை பெரிய பாதிப்பை சந்தித்து ஓரளவு நிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க பொருளாதார நிலை குறித்து கருவூல செயலாளர் ஜானெட் எல்லன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அமெரிக்க வங்கி கட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்கிறது, ஆனால், எல்லா முதலீடுகளும் திரும்ப கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இழுத்தார். அவர் பேசியது வேறுவித அர்த்தத்தில் கூறியதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் அதாவது அமெரிக்க வங்கிகளின் கட்டமைப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அது இனிமேல் திவாலாக வாய்ப்பில்லை என்றும், காப்பீட்டுத்துறையில் உள்ள சில வங்கிகளின் முதலீடுகளை உறுதி செய்ய இயலாது என்றும் அவர் குறிப்பிட்டதாக விளக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள எல்லன், 2 வங்கிகள் திவாலானதும் விரைந்து அதனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க வங்கிகளில் 9.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தொகை காப்பீடு செய்யப்படாமல் உள்ளது.இந்த தொகை என்பது அந்நாட்டு நிதியில் 40விழுக்காடாகும்.வங்கிகள் திடீரென எப்படி திவாலாகும் என்றும், ஆளுங்கட்சி இதனை கண்காணித்து இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள எல்லன், நிலைத்தன்மைதான் தற்போதைய அவசர அவசியம் என்றார்.