“லஞ்சத்துக்கு பஞ்சமே இல்ல…”
இந்தியாவின் வணிகத் தலைநகராக வர்ணிக்கப்படும் மும்பையில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டுவது ஒன்றும் சாதாரண காரியமில்லை. குறிப்பிட்டநகரில் வீடுகள் கட்டுவதற்காக முறைகேடாக கோடிக்கணக்கில் லஞ்சம் அதிகாரிகளுக்கு கைமாறுவதாக புகார் எழுந்துள்ளது. துபாயில் இருக்கும் இடங்களின் மதிப்பைவிட மும்பையில் அதிக மதிப்பு உயர இந்த லஞ்சமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.துபாயில் உள்ள ஷேக் சையத் சாலையில் தோராயமாக ஒரு சதுரடி நிலம் 22ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கிறது. இதைவிடவும் மும்பையில் விலை அதிகமாகும். லஞ்சம் ஒருபக்கம்இருந்தாலும் அதிக பிரீமியம் தொகையும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதில் பெரிய தலைவலியை ஏற்படுத்தி விடுகிறதாம்.நகரின் மையப்பகுதியில் உள்ள நிலத்தை பதிவு செய்ய 2014-ல் சதுரடிக்கு ஆயிரத்து 200 ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாம். நிலைமை தற்போது அதைவிடவும் மோசமாக உள்ளதாம்.எத்தனை பெரிய லஞ்சம் கொடுத்தாவது மும்பையில் வீடுகளை வாங்க மக்கள் போட்டி போட்டு வருவதாகவும், அந்த நகரத்தின் மீதான மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில்,மட்டும் கடந்த மாதம் மட்டும் வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்.இதனால் மும்பை நகராட்சி அதிகாரிகள் வீடுகளில் பணமழை கொட்டுகிறதாம். மும்பையில் மட்டும் இத்தனை ஆர்வம் ஏன் மக்கள் காட்டவேண்டும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பரிசாக கொடுக்கப்பட்ட சின்ன நகரம் தற்போது மும்பை என்ற சாம்ராஜ்ஜியமாக மாறியுள்ளதே இதற்கு காரணமாகும்.