மாருதி கார்ல ஏதோ பிரச்சனையாம்!!!!
இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக திகழும் மாருதி சுசுக்கி நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சூழலில் மாருதி நிறுவனம் தனது பல்வேறு வகையான கார்களில் உள்ள சிறு குறைபாட்டை கண்டறிந்துள்ளது அதாவது சியஸ்,பிரெசா,எர்டிகா,XL6, கிராண்ட் விடாரா இந்த ரக கார்களில் முன் இருக்கையில் உள்ள சீட்பெல்ட்களில் பாதிப்பு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2 முதல் 28ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட இந்த வகை கார்களில் பிழை ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. உயரத்தை சரி செய்வதில் பாதிப்பு அரிதாக இருக்கும் என்பதை உணர்ந்ததால் பிழை உள்ள பாகங்களை இலவசமாகவே மாற்றித்தர இருப்பதாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழுதுநீக்கும் மையங்களில் இருந்து கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு வரும் என்றும் மாருதி சுசிக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.