ஒரு வேல தப்பு நடந்திருக்குமோ..ஏன் பார்ட்டி பம்முது…!!
அதானி குழுமம் என்ற சாம்ராஜ்ஜியத்தையே அண்மையில் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் ஒற்றை அறிக்கை அசைத்துப்பார்த்தது.இந்த நிலையில் குஜராத்தில் உள்ள அதானி நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 34ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் நிறுவன திட்டம் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இது தொடர்பான திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனமும்,முந்த்ரா பெட்ரோகெமிக்கல் நிறுவனமும் இணைந்து சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரு எண்ணெய் தொடர்பான ரசாயன திட்டத்தை அமைக்க திட்டமிட்டு இருந்தனர். ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்துக்கு 140 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதை அடுத்து குஜராத் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை அதானி குழுமம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கும் பணிகளை அதானி குழுமம் ஆர்வம் காட்டி வருவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல பெயரை மீட்டெடுத்து வருகிறது. குஜராத்தில் அமைய இருந்த பெட்ரோ கெமிக்கல் ஆலையில்தான் இந்தியாவில் அதிகரிக்கும் பிவிசி தேவையை சமாளிக்கும் அளவுக்கு பொருட்களை தயாரிக்க அதானி குழுமம் திட்டமிட்டு இருந்தது. தற்போது நிலையற்ற பொருளாதார சூழலால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.முதலீட்டாளர்கள் நன்மதிப்பை பெறுவதற்காக உத்தியை மாற்றிய அதானி குழுமம் அண்மையில்தான் நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை 7 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.இந்தநிலையில் முந்த்ரா திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இரு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.