இந்திய கோடீஸ்வரிகள் இவங்கதான்…
ஃபோர்ப்ஸ் பத்திரிகை பணக்காரர்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் உலகளவில் சிறந்ததாக திகழ்கிறது.இந்த பத்திரிகை உலகளவில் உள்ள பெண் கோடீஸ்வரிகளை பட்டியலிட்டுள்ளது. நடப்பாண்டு பட்டியலில் இந்திய பெண்கள் அதிகம்பேர் இடம்பிடித்துள்ளனர். கடந்தாண்டைவிட 3 இடங்கள் அதிகமானோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.169 பேர் உலகின் வசதி படைத்த பெண் ஆளுமைகளாக வலம் வருகின்றனர். உலகளவிலான இந்தாண்டு பட்டியலில் 16 இந்தியர்கள் இந்த முறை புதுவரவுகளாக சேர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் சாவித்ரிஜிண்டாலின் சொத்துமதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.இதேபோல் 55 வயதாகும்ரோஹிக்கா சைரஸ் மிஸ்ட்ரியின் சொத்து மதிப்பு 7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதே பட்டியலில் ராகேஷ் ஜுன்ஜூன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு அடுத்த இடம் கிடைக்கிறது. இவரின் சொத்துமதிப்பு 5.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஒரு மாதத்துக்கு இவரின் வருவாய் மட்டும் 650 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் வினோத் ராய் குப்தா,சரோஜ் ராணி குப்தா உள்ளிட்ட பெண் ஆளுமைகளும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ள மிக முக்கிய பெண் பிரபலங்களாக திகழ்கின்றனர்.