இந்த வகை ஊழியர்களுக்குத்தான் அதிக ஆபத்து:HR சொல்வது என்ன?
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது அதிகப்படியான பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அங்கு யாருக்கெல்லாம் வேலை போகும் வாய்ப்பு அதிகம் என்று அங்கு பணியாற்றிய முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர் கிறிஸ் வில்லியம்ஸ் பட்டியலிட்டுள்ளார். அவர் பணியாளர்களை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.அதில் முதலாவதாக ஒப்பந்த ஊழியர்கள். இந்த வகை பணியாளர்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் அவர்களுக்கான பணி இழப்பு அபாயம் அதிகம் என்கிறார் கிறிஸ். இரண்டாவதாக புதிய முயற்சிகளையும், புதிய கட்டமைப்புகளையும் முயற்சிக்கும் பணியாளர்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறும் கிறிஸ்,புதிய முயற்சிகளை செய்ய விரும்பும் நிறுவனங்கள் ஒரு ஆர்வத்தில் புதிய லட்சியங்கள் கனவுகளோடு வரும் ஊழியர்களை எடுத்துவிட்டு, நஷ்டம் ஏற்படும்போது கழற்றி விடுவதில் இவர்கள் மீதும் ஒரு கண் இருக்கும் என்று எச்சரிக்கிறார். இதேபோல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பிரிவில் உள்ளவர்களை மூன்றாவது வகையாக கிறிஸ் பிரிக்கிறார்.மகிழ்வான தருணங்களை கொண்டாடவே அதிகம் விரும்பும் நிறுவனங்கள்,சிக்கல் என்று வரும்போதும், நிதி பற்றாக்குறை வரும்போது, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் பிரிவில் பணியாளர்களுக்குத் தான் முதல் மிகப்பெரிய அபாயம் இருக்கும் என்றும் அவர் பட்டியலிட்டுள்ளார். யாரெல்லாம் தப்பிக்க வாய்ப்புள்ளது? உங்கள் நிறுவனத்தில் லாபம் ஈட்டித்தரும் பொருளை தயாரிக்கும் பிரிவில் நீங்கள் பணியில் இருப்பீர்கள் எனில் அவர்களுக்கு பணி இழப்பு வாய்ப்பு என்பது குறைவு என்றும், எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு பணி இழப்பு வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.